Categories
உலக செய்திகள்

எனக்கும் என் மனைவிக்கும் கொரோனா…. சிகிச்சையை தொடங்கிய ட்ரம்ப்…. ட்விட்டரில் பதிவு…!!

தானும் மற்றும் தனது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனுடன் தேர்தல் விவாதங்களில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவரும் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டிருப்பதாக அதிபர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்ட பதிவில் “இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு எங்களுக்கான சிகிச்சையை தொடங்குகிறோம். இருவரும் இணைந்து இந்த சூழலை எதிர்கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |