யுவன் சங்கர் ராஜா தற்போது பின்னணி இசையமைத்த ஜிப்ரானை வாழ்த்தி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
கடந்த வாரம் வெளியான வலிமை படம் செம ஹிட் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தற்போது வலிமை படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் பின்னணி இசையை ஜிப்ரான் செய்துள்ளார் என்ற தகவல் பரவியது. மேலும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் இயக்குனர் வினோத்திற்கும் பிரச்சனை அதன் காரணமாகத்தான் பின்னணி இசையில் யுவனுக்கு பதில் ஜிப்ரானை படக்குழு ஒப்பந்தம் செய்தது என்ற தகவல் பரவியது. இதனால் வலிமை படத்திற்கு ஜிப்ரான் தான் பின்னணி இசையமைத்தார் என உறுதியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா படத்தை பற்றி எந்த ஒரு ட்விட்டும் போடாமல் இருந்ததன் காரணமாக யுவனுக்கும் படக்குழுவினருக்கும் பிரச்சினை இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா தற்போது பின்னணி இசையமைத்த ஜிப்ரானை வாழ்த்தி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். மேலும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், எங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவரின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். எனது இந்தி படமொன்றில் அவர் இசையமைக்க உள்ளார். மேலும் வலிமை பட குழுவினருக்கும் யுவன் சங்கருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளார்.