புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து இடங்களும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுக்க உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
புயல் பாதிப்பால் ஏற்படும் வெள்ள சேதம் உள்ளிட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்பினர் பேரிடர் மீட்பு நிவாரண பொருட்களுடன் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.