அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைகுளம் பகுதியில் சீனி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முதியவர் பூப்பாண்டியபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சீனி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சாயல்குடி போலீசார் விரைந்து சென்று சீனியின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் கூத்து வழக்குபதிவு செய்து அந்த அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.