Categories
சென்னை மாநில செய்திகள்

எந்த வழியில் வாகனங்கள் செல்லலாம்?…. எந்த வழியில் செல்ல தடை?….. இதோ முழு விவரம்….!!!!

சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் வடபலனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட எம்ஆர் எச் சாலையில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. திரு பிள்ளை ரோடு,காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வாணி மஹால்-பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனம் திருப்பி விடப்படும். வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம். புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் பிரிக்லின் ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும். மயிலாப்பூர் ஆர் கே மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் கனரக வாகனங்கள் லஸ் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |