அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது ரசாயனங்கள் செலுத்துவதில்லை. அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. இந்த முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளது . ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இந்த முட்டைகள் சமைப்பதற்கு எளிதாகவும் இருக்கும். நாட்டு முட்டை அல்லது முழு முட்டைக்கு பதிலாக வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என்கின்றனர் நிபுணர்கள். நாட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்றால் அது நிறம்தான். நாட்டு முட்டை வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். அதே சமயத்தில் பிராய்லர் முட்டை நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும். தற்போது சமூகத்தில் பிராய்லர் முட்டைகளை விட நாட்டு முட்டை தான் ஆரோக்கியமானது என்று கூறப்படுவதால் இதனை அதிக விலைக்கு விற்கின்றனர்.
இயற்கையாக முட்டைகளை இடும் கோழிகளுக்கு மருந்துகள் செலுத்த படுவதில்லை. பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் ஹார்மோன்கள் மற்றும் மருந்துகள் செலுத்தப்படுவதால் எடை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அதிக முட்டைகளை இடுகிறது. நாட்டு முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் இந்த முட்டைகளை இடும் கோழிகள் சந்தையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் மற்றும் ரசாயனங்கள் ஆளாவதில்லை. இதனால் இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
ஆனால் பிராய்லர் முட்டைகள் அவ்வாறு கிடையாது. இவை இரண்டிற்கும் ஊட்டச்சத்து வேறுபாடு உண்டு. இரண்டு முட்டைகளும் இடையே 10 லிருந்து 15 சதவீதம் வித்யாசம் இருக்கும். இந்த இரு முட்டைகளும் வேறு எந்த வித்தியாசமும் இல்லை. பிராய்லர் முட்டைகளையும் நாம் பயன்படுத்தலாம். நமக்கு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. பிராய்லர் முட்டை உண்பதால் ஆரோக்கியத்துக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.
முட்டைகளை குறிப்பிட்ட அளவு உண்ணும் வரை நமது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிகபடியாக எடுத்துக் கொள்ளும் போதுதான் அது நம் ஹார்மோன்களில் மாற்றத்தை உருவாக்கும். நாட்டு முட்டை ஆரோக்கியமாக இருப்பினும் அவ்வப்போது நீங்கள் பிராய்லர் முட்டைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான உணவுகள் என்றால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கின்றது. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை விட ஆரோக்கியமான உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு செலவு செய்வது தவறில்லை. எனவே பிராய்லர் முட்டைக்கும் நாட்டுக் கோழி முட்டைக்கும் வித்தியாசம் இதுதான்.