தமிழகத்தில் இன்று சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2000த்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், கொரோனா பாதித்த 82,324 பேர் மீண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 64 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் மொத்த பலி 1,829 ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1,205 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மொத்த பாதிப்பில் 44 பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். கொரோனா இன்று ஒரு மாவட்டத்தையும் விட்டு வைக்காமல் 37 மாவட்டங்களையும் தாக்கியுள்ளது. சென்னை பாதிப்பை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் 2ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பானது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக:
அரியலூர் – 497
செங்கல்பட்டு – 7635
சென்னை – 74 969
கோயம்புத்தூர் – 1071
கடலூர் – 1493
தர்மபுரி – 224
திண்டுக்கல் – 750
ஈரோடு – 324
கள்ளக்குறிச்சி – 1621
காஞ்சிபுரம் – 3099
கன்னியாகுமரி – 1070
கரூர் – 190
கிருஷ்ணகிரி – 225
மதுரை – 5582
நாகப்பட்டினம் – 347
நாமக்கல் – 150
நீலகிரி – 181
பெரம்பலூர் – 172
புதுக்கோட்டை – 534
ராமநாதபுரம் – 1691
ராணிப்பேட்டை – 1415
சேலம் – 1630
சிவகங்கை – 720
தென்காசி – 598
தஞ்சாவூர் – 625
தேனி – 1495
திருப்பத்தூர் – 379
திருவள்ளூர் – 6075
திருவண்ணாமலை – 2,861
திருவாரூர் – 681
தூத்துக்குடி – 1949
திருநெல்வேலி – 1551
திருப்பூர் – 288
திருச்சி – 1273
வேலூர் – 2486
விழுப்புரம் – 1411
விருதுநகர் – 1738