இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை ஆளும் திமுக அரசு செய்து வருகிறது என முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திமுக கட்சியின் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களிடம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே திமுக அரசின் சாதனையை மக்களுக்கு இணைய தளங்களின் வாயிலாக தெரிவிக்க வேண்டியது உங்களின் கடமை ஆகும். நான் எவ்வாறு ஆட்சி செய்து வருகிறேன் என்பது பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடுவது மட்டும் அந்த உத்தரவுக்காண செயல்பாடுகள் சரியாக நடந்து வருகின்றனவா என்பதை கண்காணிக்க நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். சிலர் போல போட்டோஷாப் செய்து அதனை பிரபலப்படுத்தவில்லை. எனவே திமுக அரசின் சாதனைகளை உடனுக்குடன் இணைய தளங்களின் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது உங்களின் கடமையாகும்.
நேற்று நடந்ததை இன்று வரை காத்திருந்து பார்க்கும் காலம் எல்லாம் மலையேறி சென்று தற்போது இணையதளத்தின் வாயிலாக நொடிக்கு நொடி மக்கள் அனைத்து செய்திகளையும் தெரிந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு உண்மையை மட்டும் எடுத்துரையுங்கள் அதுவே நம்மை உச்சத்திற்கு கொண்டு செல்லும். எந்த மாநிலத்திலும் மாநில அரசு செய்யாத சாதனையை நாம் தற்போது செய்து வருகிறோம். எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் மாபெரும் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது.!” இவ்வாறு அவர் கூறினார்.