Categories
லைப் ஸ்டைல்

எந்த நோயையும் அண்டவிடாது… கத்திரிக்காயின் அற்புத பயன்கள்… இன்றே சாப்பிடுங்க…!!!

உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் விரட்டியடிக்கும் கத்தரிக்காயின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கத்தரிக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கத்தரிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகமாக இருப்பதால் எந்த நோயையும் அண்டவிடாமல் தடுக்கும் குணம் கொண்டது. உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. உடல் ரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. கத்தரிக்காயில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மூளை செயல் திறனை அதிகரிக்கிறது. இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்படும். தொற்று நோயிலிருந்து காக்கும் தன்மை கொண்டது. முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக்கும். கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இது நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி இருமலை குறைக்க செய்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல மருந்து. மேலும் சிறுநீரக கற்களை கரைக்கும் வல்லமை கொண்டது. நாக்கில் ஏற்படும் அலர்ஜியை போக்குவதில் இது முக்கிய பங்காற்றுகிறது. வாத நோய், ஆஸ்துமா மற்றும் ஈரல் நோய்கள் போன்றவற்றிற்கு அருமருந்து.

Categories

Tech |