Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“எந்த நாட்டில் தயார் செய்தது” பதிக்க வேண்டியது – மத்திய அமைச்சர் அதிரடி..!!

வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் முத்திரையை பொருட்களில் பதிக்க வேண்டும் மத்திய அமைச்சர் உத்தரவு. 

தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்த வேண்டும். என்று மத்திய அமைச்சரான  ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “அனைத்து தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அவர்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை அந்தந்த பொருட்களில் பதிவிட்டு இருக்க வேண்டும். இந்த சட்டமானது 2018-ம் ஆண்டு முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு அனைத்து நிறுவனங்களும் கட்டுப்பட வேண்டும் என்று அமைச்சர் ராம்விலாஸ் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |