Categories
பல்சுவை

எந்த அபாயமும் இல்லாமல்…. உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க சிறந்த முதலீடு திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

எந்த வித அபாயமும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த வழியாகும். நீண்ட கால முதலீட்டை விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra Scheme) என்பது இந்திய அரசின் ஒரு முறை முதலீட்டுத் திட்டமாகும். இதன் கீழ் உங்கள் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாகிறது. கிசான் விகாஸ் பத்ரா நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் பெரிய வங்கிகளிலும் கிடைக்கிறது.

அதன் முதிர்வு காலம் தற்போது 124 மாதங்கள் ஆகும். இதில் குறைந்தது 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதன் கீழ் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. கிசான் விகாஸ் பத்ரா (KVP) இல் ஆவண (Certificate) வடிவத்தில் முதலீடு செய்யப்படுகிறது. ரூ .1000, ரூ 5000, ரூ .10,000 மற்றும் ரூ .50,000க்கான சர்டிஃபிகேட்டுகள் கிடைக்கின்றன. தபால் அலுவலக திட்டங்களுக்கு அரசு உத்தரவாதம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இவற்றில் முதலீட்டாளர்களுகு எந்த ஆபத்தும் இல்லை.

Categories

Tech |