Categories
மாநில செய்திகள்

எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும்…. 100 யூனிட் இலவசமா…? அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்தால் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படுமா என்பதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். ஒருவர் எத்தனை மின் இணைப்புகள் வைத்திருந்தாலும், 100 யூனிட் மின்சாரம் தடையின்றி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மின்சார வாரியத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தவே மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

Categories

Tech |