உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் நடந்துகொண்டிருக்கும் குற்றங்களை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சி ஏன் மௌனம் காக்கிறது என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உத்திரபிரதேச மாநிலத்தை போலவே,காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் ராஜஸ்தானில் அனைத்து வகையான குற்றங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு அப்பாவிகள் கொலை, தலித்துகள், பெண்கள் மீதான வன்முறை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த இரு மாநிலங்களிலும் கட்சி நடந்து கொண்டிருக்கிறது.
ராஜஸ்தானில் கராலி என்ற மாவட்டத்தில் பாபுலால் வைஷ்ணவா என்ற பூசாரி சில நபர்களால் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.அந்த சம்பவம் பற்றி ராஜஸ்தான் அரசை கண்டிக்காமல் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் மவுனம் சாதிக்கிறார்கள்?. அதன்மூலம் உத்திரபிரதேசத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை காங்கிரசார் நேரில் சந்தித்தது ஓட்டு வாங்கிய அரசியலுக்காக தான் என்று நினைக்கிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.