Categories
சினிமா தமிழ் சினிமா

‘எது பேசினாலும் தப்பாகுது’… அஜித் லுக்கை பாராட்டியது ஒரு குத்தமா?… புலம்பும் சாந்தனு…!!!

பிரபல நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

பிரபல நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இரண்டே நாட்களில் இந்த போஸ்டர்கள் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதைக் கொண்டாடும் விதமாக வலிமை படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில் நடிகர் அஜித்தின் லுக் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்களும், திரைப்  பிரபலங்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் பிரபல நடிகர் சாந்தனு வலிமை பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘தல மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார்’ என பதிவிட்டிருந்தார் .

ஆனால் தீவிர விஜய் ரசிகரான சாந்தனுவின் இந்த பதிவிற்கு அஜித் ரசிகர்கள் பலரும் நெகட்டிவ் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சாந்தனு வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘டுவிட்டரில் எது பேசினாலும் தப்பாகுது. நல்லவிதமா சொன்னாலும் மக்கள் வேறு மாதிரி அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு நல்ல விஷயம் சொன்னாலும் யோசித்து யோசித்து தான் சொல்லணும் போல. சமூக வலைத்தளம் மிகவும் ஆபத்தாக இருக்கிறது. என்ன இருந்தாலும் தல அஜித் லுக்கை ரசித்தேன். அதனால் அந்த டுவீட்டை பதிவு செய்தேன்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |