மதுரையில் மக்கள் புரட்சியை நிகழ்த்திக் காட்டியதால் என் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனை அடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், டிசம்பர் 13ஆம் தேதி முதல் ‘சீரமைப்பும் தமிழகத்தை’ என்ற பெயரில் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் வருகின்ற டிசம்பர் 13,14,15,16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மேலும் இந் நிகழ்வில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், கட்சி உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காசுக்காக கூடுவது கும்பல். லட்சியத்திற்காக திரள்வதன் பெயர் புரட்சி. மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். #எதுவும்_ தடையில்லை #சீரமைப்போம்_தமிழகத்தை” என்று அவர் கூறியுள்ளார்.