Categories
விளையாட்டு

“எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்”…. தயவு செஞ்சு சொல்லுங்க…. விரக்தியில் இளம் வீரர்….!!!

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியுள்ளது. இதில் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த 16 ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி அடுத்த போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதில் முதல் இரண்டு டி 20 போட்டிகளுக்கான லெவன் அணியிலும் ருதுராஜ்   பெயர் இடம்பெறவில்லை. இவர் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் முதலில் இந்திய அணியில் இடம் பெற்று வந்துள்ளார். இருப்பினும் இவருக்கு இன்னும் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்தபோது இடது வலது கை பேட்டிங் வரிசையை விரும்ப கூடியவராவர்.  ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்தபோது இடது, வலது கை பேட்டிங் வரிசையை விரும்ப கூடியவர் ரோகித் சர்மா. இதனால் ஓபனராக தன்னுடன் இடது கை பேட்ஸ்மேனை களமிறக்கி வருகிறார்.

இந்நிலையில் இஷான் கிஷான்  42 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியுள்ளார். இதனால் இரண்டாவது போட்டியில் ருதுராஜிற்கு  வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. இருந்த போதிலும் இஷான் கிஷானுக்கு  கேப்டன் ரோகித் வாய்ப்பு வழங்கினார். ஆனால் இந்த வாய்ப்பை இஷான் கிஷான் பயன்படுத்தவில்லை. 10 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டம் இழந்துள்ளார்.  இப்படி தொடர்ந்து  நடைபெறவுள்ள மூன்றாவது போட்டியிலும் ருதுராஜிற்கு  வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் பெரிய சர்ச்சை ஏற்படும் என்பது உறுதி. ருத்ராஜிற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது குறித்து இதுவரை ரோஹித் ஷர்மா வாய்  திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |