குடித்துவிட்டு பெண்ணை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள வடவத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சித்ரா(42) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சித்ராவின் விவசாய நிலத்தில், ஈச்சவாரியை சேர்ந்த ஜீவா(27), அன்பரசு(22) ஆகிய 2 வாலிபர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை வீசிவிட்டு சென்றனர்.
இதனையடுத்து அந்த வாலிபர்களை சித்ரா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் சித்ராவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் எருமப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பெண்ணிடம் தகராறு செய்த ஜீவா, அன்பரசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.