பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள டி.பி. சத்திரம் பகுதியில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் கடந்த 2014-ஆம் ஆண்டு மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சரஸ்வதி அவரை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் சரஸ்வதி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொலை செய்த ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.