காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோமாச்சிபாளையம் பகுதியில் அருணாச்சலம் (25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் போடிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி செங்கல் தயாரிக்கும் வேலை பார்த்து வந்தார். அப்போது செங்கல் சூளையின் உரிமையாளர் மகளான கோகிலா(20) என்பவருடன் அருணாச்சலத்திற்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் அருணாச்சலம் பெங்களூரு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கோகிலா நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து , அருணாச்சலத்தை திருமணம் செய்து கொண்டார். பின்னர் காதல் ஜோடி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.