கொரோனா வைரஸிடம் போராட மக்கள் அனைவரும் எதிர்த்து சக்தியைப் பெற்றிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் எதற்கும் கட்டுப்படாமல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மந்தை எதிர்ப்பு சக்தி குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த மந்த எதிர்ப்பு சக்தி என்பது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு 70 சதவீத மக்களின் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் சில வல்லுனர்கள் 50 சதவீதம் பேராவது எதிர்ப்பு சக்தியைப் பெற்றால் பாதுகாப்பானது என்று கூறுகின்றனர். இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பிரிவின் இயக்குனர் மருத்துவர் மைக்கேல் ரேயான் கூறும்போது, ” நாம் அந்த எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான நம்பிக்கையுடன் வாழக்கூடாது. உலகளாவிய மக்கள் தொகை, இந்த கொரோனா நோயை தடுக்க தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் அளவிற்கு நாம் நெருங்க கூட இல்லை.
இது ஒரு தீர்வு ஆகாது. நாங்கள் இதனை தீர்வாக பார்க்கவும் இல்லை” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவரின் மூத்த ஆலோசகர் மருத்துவர் புரூஸ் அய்ல்வர்ட் கூறும்போது, ” பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி அவசியம் தேவை. அது 50 சதவீத மக்களையாவது சென்றடைவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.