சென்னையை சேர்ந்த ரஞ்சன் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக மேல்வெட்டுவாணம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த 4 பெண்களில் 2 பெண்களும் காரை ஓட்டிச் சென்ற ரஞ்சனும் படுகாயமடைந்தனர்.
பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் உடமைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது ரஞ்சன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த தகவல்கள் எதுவும் அறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.