பிரபல திரைப்பட தமிழ் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் தந்தை காலமானார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் கதாநாயகியாக நந்திதா அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்தன. தற்போது தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவரின் தந்தை சிவசாமி நேற்று திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து அவர், எனது தந்தைக்கு 54 வயது தான் ஆகிறது. அவர் மறைந்து விட்டார் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் ட்வீட்டரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.