காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு தனலட்சுமி நகரில் கண்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கண்ணன் கல்லூரி மாணவி லிங்கேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு லிங்கேஸ்வரி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக லிங்கேஸ்வரியின் கரு கலந்து விட்டதால் மாணவி மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லிங்கேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லிங்கேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.