பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் 5-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் . மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. 😀 #BiggBossTamil Season 5 | விரைவில்.. @ikamalhaasan #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/c6z5vIflF5
— Vijay Television (@vijaytelevision) September 3, 2021
இந்நிலையில் பிக்பாஸ்-5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாவுடன் ஆரம்பமாகும் புரோமோ ‘ஆயிரம் பொருத்தம் பார்த்து நடக்கும் கல்யாண வீட்டிலேயே இவ்ளோ கலாட்டா இருக்கதான் செய்யும். இங்கேயே இப்டின்னா… இங்க வீடும் பெருசு, கலாட்டாவும் பெருசு. எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என கமல் கூறுவது போல் நிறைவடைகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .