தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையை அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் நியமனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி, துணைத் தலைவராக ஓபிஎஸ் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இபிஎஸ் தரப்பு நேற்று பேரவையை புறக்கணித்த நிலையில், இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் இன்று அப்பாவு உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால், இன்னும் சற்று நேரத்தில் எதிர்க்கட்சித் துணை தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.