இந்திய ராணுவ வீரர்கள் மன உறுதி மழையைப் போல் பலமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
சீனாவுடன் மோதல் நடந்த லடாக் நிம்மு பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசி வருகின்றார். அதில், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மழையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் லடாக் அருகே ராணுவ வீரர்கள் மற்றும் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டுகிறது.
எதிரிகள் எந்த திட்டமும் பலனளிக்கவில்லை. நமது வீரர்களுக்கு லடாக் மக்கள் உறுதுணையாக உள்ளனர். நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கின்றது. கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது. இந்திய நாட்டை காக்க உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி. நாட்டின் எதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டி உள்ளனர். இந்திய வீரர்கள் தைரியம், மன தைரியத்தோடு எதிரிகள் பயப்படுகிறார்கள்.