ஊட்டியில் நடக்கும் ‘எனிமி’ படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் ஆனந்த் சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலக முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘எனிமி’ . இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் . கதாநாயகியாக நடிகை மிருணாளினி நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது . இதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு சென்றுள்ளனர் படக்குழுவினர்.
And the legendary @prakashraaj sir is on our set. The master of enemies. #ENEMY pic.twitter.com/P1l1dSoCHk
— Anand Shankar (@anandshank) December 5, 2020
இந்த படப்பிடிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளார். இந்நிலையில் ஊட்டியில் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் பிரகாஷ்ராஜ் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘மிகச் சிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ் எங்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். எதிரிகளுக்கு எல்லாம் எஜமான் பிரகாஷ்ராஜ் ‘ என்று பதிவிட்டுள்ளார் .