இலங்கை அருகே தீ விபத்தில் சிக்கிய கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கடலோர பாதுகாப்பு படை இயக்குனர், குவைத்திலிருந்து இந்தியா வந்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது குறித்து விளக்கமளித்தார். மூன்று நாட்களாக இரு நாட்டு கப்பல் மற்றும் விமானம் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இலங்கையிலிருந்து 70 கடல்மைல் தொலைவுக்கு கப்பலை நகர்த்திக் கொண்டுச்செல்லும் பணிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கப்பலில் எரியும் தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாரதிப் துறைமுகத்தின் அருகேயுள்ள IOC சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த கப்பல் இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை என்ற இடத்தின் கிழக்கே தீவிபத்தில் சிக்கியது. கப்பலிலிருந்து 22 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.