Categories
உலக செய்திகள்

“எட்வர்ட் மன்னரின் நிலையில் தற்போது இளவரசர் ஹரி”… அரசு குடும்பத் தொடர்பை துண்டித்த பின் சோகத்தை வெளிப்படுத்திய ஆண்கள்…!!!!!

அமெரிக்க காதலிக்காக அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய மன்னர் எட்டாவது எட்வர்ட் வெளிப்படுத்திய அதே துயரமான நிலை தற்போது இளவரசர் ஹரியிடம் காணப்படுவதாக தெரிவிக்கின்றார். இளவரசர் ஹரியின் மிக நெருங்கிய உறவினரான மன்னர் எட்டாவது எட்வர்ட் முடிசூடிய பின் வெறும் 365 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமது அமெரிக்க காதலியான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்யும் பொருட்கள் மொத்தமும் துறந்து அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

அவரில் காணப்பட்ட அந்த சோகமான உடல் மொழியை தற்போது இளவரசர் ஹரியிடம் சமீப நாட்களாக காணப்படுவதாக ராஜ குடும்பம் தொடர்பில் பதிவு செய்தவர்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர். மேலும் இளவரசர் ஹரியும் தனது காதல் மனைவியும் ஒரு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவருமான மேகனை திருமணம் செய்த பின் ராஜகுடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இதுபோலவே மன்னர் எட்டாவது எட்வர்டு இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளார்.

அரசு குடும்பத்துடன் துண்டித்த பின் இரண்டு  ஆன்களும் சோகத்தை வெளிப்படுத்தி வந்தனர் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றார்கள். ஆனால் தங்கள் முன்னெடுத்த முடிவு தவறானது என இரண்டு ஆண்களும் ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் 1936 ஆம் வருடம் ஜனவரி 20ஆம் தேதி எட்டாவது எட்வர்டு மன்னராக முடி சூடி கொண்டவர் அதே வருடம் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி முடி துறந்துள்ளார். இதே நிலையில் தற்போது ஹரியும் இருக்கிறார் எனவும் ஆனால் அவரது எதிர்காலம் தொடர்பில் அவருக்கு புரிதல் இருப்பதாகவும் ஆய்வாளராக தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |