கலிபோர்னியாவில் எட்டு வயது பள்ளி சிறுவன் ஃபோர்ட்நைட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவனான ஜோசப் டீன் தனது இளம் பருவத்திலிருந்தே தொழில்ரீதியான வீடியோ கேம்களை விளையாண்டு வந்துள்ளார். இதனை கவனித்து வந்த ஃப்ளெட்கெலிங் இ ஸ்போர்ட்ஸ் அணி தனது 33 வீரர்களில் ஒருவராக ஜோசப் டீனை தேர்வு செய்துள்ளது. இவர் தற்பொழுது ஒரு ப்ரொபஷனல் கேமர் மட்டுமின்றி அவ்வணியில் ஊதியம் பெறும் இளம் வீரராக உள்ளார். வீடியோ கேம் பிளேயரான ஜோசப் டீன் போனசாக $ 33000 அதாவது இந்திய மதிப்பில் 23 லட்சம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிபிசியிடம் கூறியதாவது,33 வீரர்களில் ஒருவராக தன்னை தேர்வு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவர் தாயார், நான் என் மகன் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன், அதில் எந்தத் தவறும் வந்ததாக எனக்கு தோன்றவில்லை, அதனால் தான் நான் டீனை ஊக்குவித்தேன் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஃபோர்ட் நைட் வீரர்களில் அதிக வருமானம் ஈட்டும் 10 நபர்களில் 8 நபர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று esportsearnings.com வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இதனிடையே ஃபோர்ட் நைட் விரர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு உலக கோப்பையம் பரிசு தொகையும் வழங்கப்படும் என்ற நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டில் வெற்றிபெற்ற கைல் கியர்ஸ் டோர்ஃ 3 மில்லியன் டாலர்கள் வெற்றி பெற்றுள்ளார் இந்திய மதிப்பில் 22 கோடியே 66 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.