உடல் எடை கூறிய இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
உடல் எடையை குறைக்க சிறிதளவு சீரகம் போதும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எப்போதும் இயற்கை முறை மருத்துவம் தான் எந்த பக்க விளைவுகளும் இன்றி நம் உடலில் உள்ள நோய்களை நீக்கும் மருந்தாக அமையும். அதே போல தான் இந்த சீரக தண்ணீரும்.
முதலில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்பு குளிர வைத்து தினமும் அடிகடி குடித்து வந்தால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இதனை குடிப்பதால் அளவுக்கு அதிகமாக பசி எடுப்பதும் குறைக்கப்பட்டு அளவுக்கு மிஞ்சி உணவு சாப்பிடும் பழக்கமும் தவிர்க்கப்படுகிறது. சரியான உணவு சரியான விகிதாசாரத்தில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.