கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன் பங்கேற்று மனு அளித்தார். முன்னதாக அவர் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு லைசன்ஸ் முடிந்தும் சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டவிரோதமாக கல் குவாரிகளை நடத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை வரவேற்பதாகவும் கூறினார்
.முல்லைப் பெரியாறு மேகதாது என அண்டை மாநிலங்கள் அணை பிரச்சனைகளை முன்வைப்பதாகவும் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாக புகார் ஒன்றை முன்வைத்தார் அந்த புகார் உண்மைதான் எனவும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.