Categories
மாநில செய்திகள்

எடப்பாடி நேர்ல போனாரு…! காமெடி பண்ணுறீங்களா ? அதிமுக ஆட்சியில் யாரும் வரல …!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, எங்கள் காலத்திலேயே 2018ல் வரலாறு காணாத வெள்ளம் அன்றைக்கு இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்டது. கேரளாவில் மிகப்பெரிய தொழில் சேதம், உயிர்சேதம் ஏற்பட்டது. அப்போ கூட அத்துமீறி நாங்க ஆட்சியில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேரள அமைச்சர் அத்துமீறி முல்லை பெரியாறு அணையை இந்த மாதிரி திறக்கவில்லை.

நமக்குத்தான் தண்ணீர் வந்தது, நாம்  தான் அந்த பகுதியில் தண்ணீர் திறந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த அணை பாதுகாப்பாக இருக்கிறது. 142 அடி உயர்ந்து, எங்கள் முதலமைச்சர் போய் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் பேசி இருக்கிறார். 152 அடி உயர்த்துவதற்கு தடையாக இருக்கின்ற அந்த மூன்று மரங்களை வெட்டுவதற்கு நீங்கள் அனுமதி பெற்றுத்தர வேண்டும், என்னுடைய பராமரிப்பில் இருக்கின்ற காவல் அதிகாரிகள், அது வும் உங்க கேரளத்தை சேர்ந்த அதிகாரிகள் எங்களுடைய அலுவலர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்க மறுக்கிறார்கள்

இது சட்டவிரோதமானது, எங்களுடைய மக்களுடைய வரிப் பணத்தை பெற்றுக்கொண்டு இன்றைக்கு ஊதியம் வாங்குகின்ற அந்த காவல்துறை ஒரு பக்கமாக இருக்கிறது என்பதை தான் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இதெல்லாம் துரைமுருகனுக்கு என்ன தெரிய போகுது ? அவருக்கு எங்கே தெரியப்போகிறது. இன்றைக்கு 80 வயதிலும் அமைச்சர் ஆன பிறகும் கூடகாமெடி பண்றேன் என்று சொல்லிவிட்டு பேசுகிறார். அவருக்குத் தகுதி இல்லை என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகப்பெரிய வரலாறு காணாத வெள்ளத்தால்  இடுக்கி அணை அபாயத்தில் சந்திக்கின்றது. இதனால் அந்த அணையை திறந்து விடுகின்றார்கள்,  இதனால் மிகப்பெரிய மக்கள் சேதம், உயிர்சேதம். அங்கு இருக்கின்ற முக்கிய நடிகருடைய அம்மாவை அண்டாவில் வைத்து கொண்டு செல்கின்றார்கள். அந்த அம்மாவுக்கு மூன்று கோடி ரூபாய் பெருமான கார் இருக்கிறது. அப்பவே அந்த அணையை திறப்பதற்கு அங்குள்ள கேரள அமைச்சர்கள் வரல. இப்ப தானே வந்து திறந்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |