Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி அருகே ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் திருட்டு”….. 2 வாலிபர்கள் கைது…!!!!!

ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுந்திருக்கும் சின்ன முத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் எடப்பாடி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அந்த எந்திரத்தில் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் வாலிபர்களிடம் உதவி கேட்ட பொழுது அவர்கள் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளனர். பின் முருகனிடம் பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறி ஏ.டி.எம் கார்டை  திருப்பிக் கொடுத்துள்ளனர். முருகனும் வீட்டுக்கு வந்து விட்டார்.

பின் அவரின் வங்கி கணக்கிலிருந்து 1 லட்சத்து 38 ஆயிரம் வரை எடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முருகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நூதன முறையில் பணம் திருடிய ஜீவானந்தம்(22) கதிரவன்(21) உள்ளிட்ட டிப்ளமோ பட்டதாரிகளை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 37 ஏடிஎம் கார்டுகளையும் பறிமுதல் செய்தார்கள். இவர்கள் போலி ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டியதும் அவ்வாறு அபகரித்த பணத்தை ஆங்காங்கே விடுதிகளில் அறை எடுத்து தங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

Categories

Tech |