Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை..!! விரும்பி சாப்பிடும் அப்பளம்…. உடலுக்கு வைக்கும் ஆப்பு…!!

அப்பளம் சாப்பிடுவதனால் ஏற்படும் தீமைகள் என்ன என்பது பற்றிய தொகுப்பு

தமிழர்களின் சாப்பாட்டில் தவறாமல் இடம் பெறுவது அப்பளம். பலவிதமான குழம்புகள் இருந்தாலும் அப்பளம் இருந்தால் பலரும் விரும்பி உணவைச் சாப்பிடுவார். திருமண விருந்துகளில் அப்பளத்தை பாயாசத்தில் பொடித்துப் போட்டு சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு அப்பளம் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பளத்தை விரும்பி சாப்பிடும் போது நமக்கு ஏற்படும் ஆபத்தை பலரும் அறிந்திருக்கவில்லை. எப்போதாவது அப்புளம் சாப்பிடலாம். ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.

உப்பும்,  ஆப்ப சோடாவும் அப்பளத்தில் அதிகமாக சேர்க்கப்படுகின்றது. உடலில் இது இரண்டும் சேர்வது தீங்கு விளைவிக்கும். செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

அதிக உப்பு இரத்தத்தில் சேர்ந்தால் குமட்டல், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற ஏராளமான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

அதிகம் அப்பளம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும்.

வயிற்றிலிருந்து குடல் வரை அப்பளம் செல்லும்போது வழியில் தாக்கத்தை ஏற்படுத்தி வாய்வுத் தொல்லை ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது.

சர்க்கரை நோயாளிகளும் வயதானவர்களும் அப்பளத்தை உணவில் சேர்க்காமல் இருப்பது நல்லது.

 

 

Categories

Tech |