Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை….!! மின் இணைப்பில் இருந்த மொபைல் போன்…. இளம்பெண் மரணம்…..!!

சுவிஸில் இளம்பெண் ஒருவர் குளியல் தொட்டியில் குளிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் St. Gallen மண்டலத்தில் அமைந்துள்ள Gossau பகுதியில் கடந்த வியாழக்கிழமை இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.ர் இதனைத் தொடர்ந்து மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்நிலையில் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இளம்பெண் குளியல் தொட்டியில் குளித்துக்கொண்டே சார்ஜர் இணைப்பில் இருந்த தனது மொபைலை பார்த்துக் கொண்டிருந்திருகிறார் என்றும் அப்போது தவறுதலாக மொபைல் தொட்டிக்குள் விழுந்தது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மின் இணைப்பில் இருக்கும் மின் சாதனங்களை கவனமாக உபயோகிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Categories

Tech |