ஒரு காலில் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாக்பூரில் இருக்கும் கோரடி பகுதியை சேர்ந்தவர் அசோக் மேன்வட். இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரிடம் தொலைபேசியில் பேசியது அசோக்கின் மகன். சிறுவனிடம் பேசிய மர்ம நபர் அவனது அப்பாவின் செல்போனில் தான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார்.
அவர் கூறியது வேறு இடத்திலிருந்து அடுத்தவர்கள் செல்போனை இயக்கும் ரிமோட் செயலி ஆகும். சிறுவனும் தெரியாமல் செயலியை பதிவிறக்கம் செய்ய உடனடியாக செல்போனில் இணைக்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதனை அறிந்த அசோக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை எந்த காவல் துறையினர் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.