மருத்துவ ஆலோசகர் ஒருவர் கொரோனாவின் இரண்டாவது அலை உலக நாடுகளை மொத்தமாக புரட்டி எடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவில் கொரோனா தொற்று நோயின் முக்கிய மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருபவர் Dr .Zhong Nanshan ஆவார். தற்போது இவர் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உலகில் உள்ள பல நாடுகளை புரட்டி எடுத்து வரும் நிலையில் அதன் தாக்கம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இந்த இரண்டாவது அலையின் தாக்கம் சீன மக்களை பாதிக்காது, ஏனெனில் கொரோனாவுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்று வருகிறது.
ஆனாலும் சீனாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் கொஞ்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். Xinjiangவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களின் மூலம் கொரோனா பரவி வருகிறது. இதனால் கடந்த 36 மணி நேரத்தில் 190 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அங்கு 4.75 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக டாக்டர் Zhong Nanshan தெரிவித்துள்ளார். இந்தப் பெருந்தொற்றால் இதுவரை 45 மில்லியன் மக்கள் உலக நாடுகளில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறிய அவர், இதன் எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்றார். இதுபோல கொரோனாவின் இரண்டாவது அலையானது இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ்,மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளை புரட்டி போட்டு வருகிறது.