தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 26, 27ம் தேதிகளில் தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மக்கள் குடை வைத்திருப்பது பாதுகாப்பானது.