உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த போர் சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் கருதினர். ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் போராடி வருவதால் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் உக்ரைனில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து கொண்டே வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. அதனால் பலரும் போரை நிறுத்துங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் உலகளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரக் கூடும் என்ற ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். மேலும் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் அதிக அளவு கனிம வளங்களை உற்பத்தி செய்து வருகிறோம். எங்கள் பொருட்களை வழங்குவதற்கான நிதி மற்றும் தளவாடங்களுக்கு தொடர்ந்து சிக்கல்களை உருவாக்கினால் அவற்றின் விலைகள் உயரும் என்று எச்சரித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.