அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு
அன்னாச்சி பழத்தில் உடலுக்கு நன்மை கொடுக்கும் பல சத்துக்கள் இருந்தாலும் அது நமது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும். அளவாக சாப்பிடுவதால் நன்மை கொடுக்கும் அன்னாசிப்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அண்ணாச்சி பழம் அதிக அளவில் சாப்பிடுவதனால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
அன்னாசிபழம் சாப்பிடுபவர்கள் ஏதேனும் மருந்து சாப்பிட்டால் அதோடு அன்னாசி பழத்தின் தன்மையும் சேர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் வலி நிவாரணி அல்லது ஆன்டி-பயாடிக் போன்ற மருந்துகளை சாப்பிடும் பொழுது அன்னாசி பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சரியாக பழுக்காத அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதும் ஜூஸ் போட்டு குடிப்பதும் உடலில் நச்சுத் தன்மையை உருவாக்கி வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.
அதிக அளவு அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் பற்களில் கரை ஏற்படுவதோடு இது எனாமலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. இதனால் பல் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் அன்னாசிப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
சில நேரங்களில் அண்ணாச்சி பழம் சாப்பிடுவதால் அலர்ஜி போன்றவை ஏற்படும் எனவே பலத்தை சாப்பிடுவதற்கு முன்பு சுத்தமான உப்பு நீரில் கழுவி விட்டு சாப்பிட வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
அன்னாசி பழத்தில் அதிக அளவு சிட்ரிக் இருப்பதால் இதை சாப்பிட்ட பிறகு தொண்டையிலும் வாயிலும் ஊறும் உணர்வு தோன்றும். இது சிலருக்கு வயிற்று வலியை ஏற்படுத்தும்.