ரேஷன் கடையில் அரிசி இல்லை என்று கூறிய ஊழியரின் பெயரைக் கேட்டு செல்போனில் வீடியோ எடுத்து அவரை சம்பந்தப்பட்ட ஊழியர் மிரட்டிய காட்சியை சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் ரேஷன் கடையில் அரிசி வினியோகிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து கேள்வி எழுப்பிய நுகர்வோர் ஒருவர், ஊழியரின் பெயர் விவரத்தை கேட்டு செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ரேஷன் கடை ஊழியர் அவரை தாக்க முயன்றதுடன், இந்த வீடியோவை கொடுத்தாலும் தம்மை வேலையிலிருந்து நீக்க முடியாது என்று சவால் விடுத்து உள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Categories
“எங்க வேணாலும் போடா” என்ன எவனும் ஒன்னும் பண்ண முடியாது…. ரேஷன் கடை ஊழியர் அட்டூழியம்….!!!!
