Categories
சினிமா

எங்க வீட்ல விசேஷங்கோ…. காதல் மனைவி கனவை நிறைவேற்றிய ரவீந்தர்…. குவியும் வாழ்த்து….!!!!

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.  மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பங்கேற்றனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ரெஸ்டாரண்டில் ஹனிமூன் கொண்டாடிய அவர்கள் பின்னர் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றன. அதன்படி திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலானது.

அதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள நிலையில் அந்த போட்டோக்களும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் விஷேசம் நடந்துள்ளது. அதாவது மகாலட்சுமி அணிந்த மஞ்சள் கயிற்றை பிரித்து கோர்த்துள்ளனர். இதுவரை நயன்தாரா ஸ்டைலில் மஞ்சள் கயிறுடன் மகாலட்சுமி போஸ் கொடுத்தார். இதற்கு நெட்டிசன்கள் கூட கிண்டல் அடித்தனர். அதாவது எல்லாம் நயன்தாரா மேடத்தால் வந்தது, அவர்தான் மஞ்சள் கயிறுடன் போஸ் கொடுத்து வருகிறார் என்று மகாலக்ஷ்மியை கிண்டல் அடித்தனர். இந்நிலையில் மகாலஷ்மி மஞ்சள் கயிறு மாற்றி தாலி சரட்டில் கோர்க்கும் நிகழ்வு நடைபெற்று உள்ளது. இதனை ரவிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கணவன் மனைவி இருவரும் மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோவை ரவீந்தர் பகிர்ந்துள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் இருவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |