பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு முதியவர் ஒருவர் ஹாயாக வலம் வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி அருகே ஹர்கங்கா கிராமத்தில் வசித்து வரும் முதியவர் ஒருவரின் வீட்டிற்குள் ஒரு நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. ஆனால் அந்த பாம்பை கண்டு அஞ்சாத அந்த முதியவர் பாம்பை பிடித்தது மட்டுமில்லாமல் அதை தனது கழுத்தில் சுற்றிக் கொண்டார். இதையடுத்து தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு பாம்புடன் கிராமத்தில் ஹாயாக வலம்வந்தார். இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரிடம் பாம்பை விட்டுவிடும்படி கூறினார். இதையடுத்து அந்த முதியவர் பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டு வந்தார். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.