தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் அனு இம்மானுவேல். இதையடுத்து சிவகார்த்திகேயன் உடன் நம்ம வீட்டுபிள்ளை திரைப்படத்திலும் நடித்தார். மேலும் அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இதனிடையில் அனு இம்மானுவேல் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷும் இருவரும் காதலிப்பதாக இணையதளங்களில் கிசு கிசுக்கள் பரவியது.
இது தொடர்பாக அனு இம்மானுவேல் அளித்துள்ள பதிலில் “நான் எதிர்பாராத வகையில் திரையுலகிற்கு வந்தேன். சில வெற்றி திரைப்படங்களிலும் சில தோல்வி படங்களிலும் நடித்திருக்கிறேன். இப்போது நான் அல்லு சிரிஷுடன் ஜோடியாக நடித்ததால் அவரை காதலிக்கிறேன் என வதந்தி பரப்பியுள்ளனர். அதெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை. எனினும் என் அம்மா காதல் வதந்தியை பார்த்து அழுது விட்டார்.
இதனால் என் அம்மாவின் வேதனையை பார்த்து நான் வருத்தப்பட்டேன். ஊர்வசிவோ ராட்சசிவோ திரைப்படத்திற்கு முன் எனக்கு அல்லு சிரீசை தெரியாது. அவரை சந்தித்ததுகூட கிடையாது. படத்தின் பூஜையன்று மட்டும்தான் அவரை சந்தித்தேன். இந்த காலத்தில்கூட ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து காபி குடித்தால் விதவிதமான கற்பனை கதைகளை அவிழ்த்து விடுகின்றனர்.”என்று கோபமாக கூறினார்.