எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை என்று பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க மற்றொரு புறம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. பல மாநிலங்களில் இந்த அவலநிலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளியை இந்தூரிலிருந்து சென்னைக்கு எடுத்து வர விமான ஆம்புலன்ஸ் கட்டணம் 9 லட்சம், உடன் வரும் டாக்டருக்கு 35,000, ஆனால் இன்று விமான ஆம்புலன்ஸ்க்கு 24 லட்சம், உடன் வரும் டாக்டருக்கு 3 லட்சம். இதற்கும் 3 நாள் காத்திருப்பு. எங்கே போய் நிற்கும் கொரோனா கொள்ளை? கேள்வி எழுப்பியுள்ளார்.