Categories
அரசியல்

“எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்”…? முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!!

சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசியபோது, “பால் விலையை குறைத்ததன் காரணமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் கூட செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுகின்றனர்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |