Categories
சினிமா

“எங்கள் வாழ்க்கை எங்கள் முடிவு…!” திருமணத்திற்கு முன்பே சர்ச்சையாக பேசிய தனுஷ்…!!!!

ரஜினியின் சம்மதத்தை பெறாமலேயே நடிகர் தனுஷ் அவருடைய மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஊடகத்திற்கு தெரிவித்தது தற்போது பேசப்பட்டு வருகிறது.

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த காதல் கொண்டேன், திருடா திருடி போன்ற படங்கள் வெற்றி அடையவே தனுஷ் தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகனாக இடம் பெற்றார். கடந்த 2002ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து அதன்மூலம் கவரப்பட்டு ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா அவருக்கு பூங்கொத்து கொடுத்து அனுப்பினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து இவர்களது நட்பு காதலாக மாறவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நடிகர் தனுஷ் சுள்ளான் பட பிரஸ் மீட்டில் அறிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் “உங்கள் திருமணம் குறித்து ரஜினிகாந்துக்கு தெரியுமா…?” என கேள்வி எழுப்பினார் அதற்கு தனுஷ் “எங்கள் திருமணம் குறித்து நாங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் இது குறித்து எந்த விபரமும் ரஜினிகாந்துக்கு தெரியாது…!!'” என கூறினார் . இது அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Categories

Tech |