தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, ஜான் கொக்கன், மகாநதி சங்கர், ஜி.எம் சுந்தர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியான நிலையில், சமீப காலமாகவே எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இருப்பினும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய நண்பர்களுடன் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகை மஞ்சுவாரியாரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து மஞ்சுவாரியர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித்குமார் சாருக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய முதல் மோட்டார் சைக்கிள் வாகன பயணத்திற்கான அட்வென்சர்ஸ் ரைடர் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Huge thanks to our Super Star Rider Ajith Kumar Sir! Honoured to be joining Adventure Riders India for my first ever two-wheeler road trip! Thank you Ajith Sir for introducing me to @suprej and @sardar_sarfaraz_khan. Thank you Sir!
Thank u #bineeshchandra for joining. pic.twitter.com/5FtVnrv4D1— Manju Warrier (@ManjuWarrier4) September 2, 2022