டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அதில் எங்களின் பலம் எங்களுக்கு தெரியும். இந்நிலையில் இரட்டை இலையும், கட்சியும் இருப்பதால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். எனவே அம்மாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பது எனது கோரிக்கை. அதை ஏற்பதும், மறுப்பதும் அவரவர்கள் தனி விருப்பம்.
இந்நிலையில் ஒரு நாட்டிற்கு 2 கட்சிகள் இருப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. தற்போது திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மேலும் அவர்களது கூட்டணி பலம் இழந்து வருகிறது. இந்நிலையில் மத்திய ஆட்சி அமைக்கக்கூடிய ஒரு கூட்டணி இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும். மேலும் நல்ல கூட்டணி தான் தலைமை யார் என்று தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார்கள் என அவர் கூறியுள்ளார்.